கமுதி அருகேயுள்ள நீராவி கிராமத்தைச் சேர்ந்த வ. முத்துராமலிங்கம் (57) என்பவர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.