விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்ற விதிமுறையை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் பேருந்துகளில் சரியான கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.