மதுரை பெரியார் நிலையத்தில் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு ராணி மங்கம்மாள் அன்னசத்திரத்தை மதுரை மாநகராட்சி நிர்வாகம் இடிக்க முயற்சிப்பதை கண்டித்து, விஜயநகர நாயக்கர் வரலாற்று மீட்பர் அசோசியேசன், அனைத்து நாயுடு நாயக்கர் தமிழக கூட்டமைப்பு, நாயக்க வம்சம் நாயுடு மகாஜன சங்கம், மற்றும் கூடல் நகர் நாயுடு சங்கம் ஆகிய நாயுடு சங்கங்கள் இணைந்து மாநில அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இன்று (மே. 16) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.