மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இன்று (மே. 20) காலை, மதுரை மாவட்ட தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்தக் கோரி கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கவும், ஆன்லைன் விற்பனையை நிறுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன் காரணமாக மதுரையில் ஏராளமான மருந்து கடைகள் மூடப்பட்டிருந்தன.