உணவுத்திருவிழா நடைபெற்ற கடைகளுக்குள் புகுந்த மழை நீர்

78பார்த்தது
உணவுத்திருவிழா நடைபெற்ற கடைகளுக்குள் புகுந்த மழை நீர்
மதுரை தமுக்கம் மைதானத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறும் சரஸ் எக்ஸ்போ தேசிய அளவிலான உணவு திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி, நேற்று பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த விழாவில், மழை நீர் புகுந்ததால் கடைகள் மாநாட்டு மைய அரங்கத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் மகளிர் சுய உதவிக் குழுவினர் சிரமத்தையும், பொதுமக்கள் வருகை குறைந்ததால் கவலையையும் சந்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி