மதுரை: மாவட்ட அளவில் உள்ள ஆதார் சேவை மையங்களை மேம்படுத்த கோரிக்கை

618பார்த்தது
மதுரை கே.கே. நகரில் உள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையம், தென் மாவட்ட மக்களுக்கு ஆதார் திருத்தம் மற்றும் அப்டேட் சேவைகளை வழங்கி வருகிறது. பள்ளிகள் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஹால்டிக்கெட் பணிகளுக்காக மாணவ, மாணவியர் தங்கள் ஆதார் விவரங்களை திருத்த மதுரைக்கு வருகின்றனர். போதிய மையங்கள் இல்லாததால், 5 மணிவரை காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி