தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 14 நாட்களாக வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உதவியாளர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கருப்புச்சட்டை அணிந்து பணிகளைப் புறக்கணித்தனர். மதுரை மாவட்டத்தில் சுமார் 200 கிராம உதவியாளர்கள் பங்கேற்று, திமுக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், போராட்டங்களை அலட்சியப்படுத்தும் அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.