மதுரை: கண்மாய் பாசனமின்றி தவிக்கும் விவசாயிகள்

490பார்த்தது
மதுரை: கண்மாய் பாசனமின்றி தவிக்கும் விவசாயிகள்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வில்லூர் கண்மாய் பாசனத்தை நம்பி நெல் மற்றும் பருத்தி பயிரிட்டு வருகின்றனர். போதிய மழையின்றி கண்மாய் நிரம்பாததால், உவரி பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளிக்குடி தாலுகா செயலாளர் ராஜேந்திரன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி