மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்ய வேண்டியதில்லை என்றும், அவர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணி தனியார் மயமாக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டி, தற்போது போராட்டம் நடத்துபவர்கள் அதை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியில் இருந்தபோதும், தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.