மதுரை அண்ணாநகர் தேவர்நகர் பகுதியைச் சேர்ந்த ராமையா (78) மற்றும் வீரமாகாளி (68) தம்பதியினர், தங்கள் இளைய மகள் ஜெயலட்சுமி மற்றும் மகன் சந்திரமுத்து ஆகியோர் தங்கள் இடத்தை அபகரிக்க முயல்வதாகவும், தாக்கி கொல்ல முயல்வதாகவும் கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். வயது முதிர்வு காரணமாக பராமரிப்பு கூட கிடைக்காத நிலையில், பிள்ளைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ளதாகவும், தங்களைக் காப்பாற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், தம்பதியினர் சமூக நலத்துறை அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.