மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், பணி நேரத்தின் போது ஏலச்சீட்டு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் என மொத்தம் 3 பேர் மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் ஏலச்சீட்டு நடத்தியதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.