மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. கே. அர்வின் தலைமையில் வருகிற 10-ஆம் தேதி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரம் முன் பணம் செலுத்தி, 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும்.