மதுரை: விசாரணை அதிகாரி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

368பார்த்தது
மதுரை: விசாரணை அதிகாரி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
தென்காசியைச் சேர்ந்த நீலகண்டன் மீது சுரண்டையைச் சேர்ந்த பெண் தனது மகனின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் பேரில் நீலகண்டன் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி நீலகண்டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை என்றும், விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் அவரது கருத்தைக் கேட்க விரும்புவதாகவும், விசாரணை அதிகாரியான லட்சுமிபிரபா வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி