மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோர்களிடம் இதைப் பற்றிக் கூறியபோது அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமிக்குத் தொந்தரவு தந்த அதே பகுதியைச் சேர்ந்த டூ-வீலர் மெக்கானிக் முத்துக்குமார் (18), பிளஸ் 2 மாணவர்கள் இருவர், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் மீதமுள்ள 5 பேரை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். எட்டாம் வகுப்பு மாணவிக்குக் கூட்டுப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.