எஸ் ஐ ஆர்;மூன்று நாட்களுக்கு வாக்கு சாவடிகளில் உதவி மையங்கள்

1பார்த்தது
எஸ் ஐ ஆர்;மூன்று நாட்களுக்கு வாக்கு சாவடிகளில் உதவி மையங்கள்
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள 2,752 வாக்குச் சாவடி மையங்களிலுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று கணக்கீட்டுப் படிவங்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை நிறைவு செய்து வழங்குவதை எளிமைப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையம் செயல்படவுள்ளது. இந்த மையங்களில் வாக்காளர்கள் நிறைவு செய்யப்பட்ட படிவங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்புப் படிவங்கள் நிறைவு செய்வதில் ஏற்படும் சந்தேகங்களைக் களைந்து, படிவங்களை நிவர்த்தி செய்வதற்கு தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த உதவி மையங்களை வாக்காளர்கள் பயன்படுத்தி கணக்கெடுப்புப் படிவங்களை நிறைவு செய்து வழங்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி