லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்ட சிறப்பு எஸ். ஐ. சஸ்பெண்ட்

2பார்த்தது
மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையோரமாக நிறுத்தியிருந்த லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்பதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் மதுரை மதிச்சியம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மகேந்திரன் லஞ்சம் கேட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையறிந்த காவல் ஆணையர் அபிஷேக் தீக்ஷித் உத்தரவின் பேரில், லஞ்சம் கோரியது மற்றும் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறப்பு எஸ். ஐ. மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி