ஹாக்கி இளைஞர் உலகக்கோப்பைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கஏற்பாடு

8பார்த்தது
ஹாக்கி இளைஞர் உலகக்கோப்பைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கஏற்பாடு
தமிழ்நாட்டில், சென்னை மற்றும் மதுரையில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை நடைபெறவுள்ள 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை நாளை மாலை 5 மணிக்கு மதுரைக்கு வர உள்ளது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் விக்ரம் ஸ்கூல் அருகில் வரவேற்பு அளிக்கப்படும். 15.11.2025 அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு கொண்டுவரப்படும். வழிநெடுக கலை நிகழ்ச்சிகள், குதிரைப்படை அணிவகுப்புகள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடைபெறும்.