சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் பேச்சு

4பார்த்தது
மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் வளர்ச்சித் திட்டங்களைப் பெறுவதில் 100 சதவீதம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் உறவு ஒரு குடும்பத்தைப் போல இருக்க வேண்டும் என்றும், மாநில அரசு தாயைப் போல செயல்பட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மெட்ரோ ரயில் திட்டம், முல்லைப் பெரியார் அணை, கச்சத்தீவு விவகாரங்களில் தமிழகம் வாய்ப்புகளை நழுவ விட்டதாகவும், மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுத் தருவது முதலமைச்சரின் தார்மீகக் கடமை என்றும், அதை அவர் மறந்துவிட்டதாக மக்கள் கருதுவதாகவும் உதயகுமார் கூறினார்.