மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் துவக்கம்

84பார்த்தது
மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் துவக்கம்
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று (31.07.2025) மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி மண்டலம் 3 பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுற்றுலா அரங்கில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து துறை சார்ந்த மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 30.07.2025 வரை நகரப் பகுதியில் 22 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 43 முகாம்களும் என மொத்தம் 65 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 32,055 மனுக்களும், பிற சேவைகளைப் பெற 27,373 மனுக்களும் என மொத்தம் 59,428 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி