மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு: விற்பனை அமோகம்

0பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் பாலத்தின் கீழ் பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் அருகே மூட உத்தரவிடப்பட்ட மூன்று மதுபான கடைகளில், எண். 5556 கொண்ட ஒரு கடை மட்டும் ஒரு நாள் மூடப்பட்டு, தற்போது மூன்று நாட்களாக திறந்தே விற்பனை நடைபெற்று வருகிறது. பார் உரிமையாளர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததால் அவருக்கு சலுகை வழங்கப்படுவதாக அப்பகுதியில் பேச்சு நிலவுகிறது. இந்த கடை வழியாக பள்ளி மாணவிகள் செல்வதால், இத்தொகுதியின் எம்எல்ஏவும் அமைச்சருமான நிர்மல் குமார் இது குறித்து நடவடிக்கை எடுப்பாரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி