ஆசிரியர் தகுதித் தேர்வு;தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு

1பார்த்தது
ஆசிரியர் தகுதித் தேர்வு;தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு
அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (TET) இன்று (தாள்-1) மற்றும் நாளை (தாள்-2) நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில், இன்று தாள்-1 தேர்வு 14 மையங்களில் 4249 தேர்வர்களுக்கும், நாளை தாள்-2 தேர்வு 52 மையங்களில் 14,800 தேர்வர்களுக்கும் நடைபெறுகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தேர்வர்கள் கருப்பு பந்து முனை பேனா, ஹால் டிக்கெட் மற்றும் ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமை, கடவுசீட்டு ஆகிய நான்கு சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் அசல் சான்றை எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் இன்றி தேர்வு எழுத அனுமதி இல்லை. 14 தேர்வு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி