சாம்பியன்களின் எண்ணிக்கை அதிகமாக வைப்பு -விஸ்வநாதன் ஆனந்த்

0பார்த்தது
சாம்பியன்களின் எண்ணிக்கை அதிகமாக வைப்பு -விஸ்வநாதன் ஆனந்த்
மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கிய 3 நாள் சதுரங்கப் பயிற்சி கருத்தரங்கில் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், சர்வதேச சதுரங்க சாம்பியன்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறினார். சாம்பியன்கள் விளையாடிய ஆட்டங்கள், திட்டங்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு விளக்குவதே கருத்தரங்கின் நோக்கம். ஐ.ஐ.டி., மருத்துவப் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிப்பது வீரர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கருத்தரங்கில் விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய 'லைட்டிங் கிட்' புத்தகம் வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி