மதுரையில் தொடரும் அண்ணாமலை குறித்த பரபரப்பு போஸ்டர்கள்.

1பார்த்தது
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை நகர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இன்று (ஜூன் 3) ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.