திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பக்தர்களின் கூட்ட நெரிசலால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மயக்கமடைந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் சன்னதி தெரு, கீழரத, மேல ரத வீதிகளில் முறையான தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வரிசையில் காத்திருக்கும் பெண் பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெண் காவலர்கள் தண்ணீர், மோர் வழங்கி வருகின்றனர்.