மதுரையில் சுதந்திரப் போராட்ட தியாகி வைத்தியநாத ஐயரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் இல.அமுதன் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் உக்கிர பாண்டிய பட்டர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த மரியாதை செலுத்தும் நிகழ்வு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நடைபெற்றது.