மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்

374பார்த்தது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்
2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள், தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் தொடங்கின. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று மற்றும் நாளை முகாம்கள் நடைபெறுகின்றன. சவுதி அரேபியாவின் விதிமுறைப்படி, காய்ச்சல், ஹெபடைடிஸ் B, நிமோனியா, மெனிஞ்சைடிஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் ஆரோக்கிய சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரக செயல் திறன், மார்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று 75 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி