திவ்யா படம் குறித்து வாட்டர் மிலன் ஸ்டார் பேட்டி

0பார்த்தது
மதுரை மாட்டுத்தாவணி தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி இயக்கி நடித்த திவ்யா திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நிகழ்வு நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிக் பாஸ் புகழ் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், இந்தப் படத்தைப் பார்க்கும்போது சசிகுமார் எடுத்த நந்தன் படம் போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறினார். சசிகுமார் போல் சமூக சீர்திருத்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இயக்குனரை அவர் பாராட்டினார். திவ்யா படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்திய திவாகர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் குழந்தைகள் அழ ஆரம்பித்ததாகவும், 'நடிப்பு அரக்கன்' என்ற சொல் வைரலானதாகவும் தெரிவித்தார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என இப்போதே சொல்ல முடியாது என்றும், வைல்ட் கார்டு என்ட்ரி கேமை மாற்றலாம் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி