ஒருங்கிணைந்த அதிமுகவை விரைவில் எதிர்பார்க்கலாம்

1பார்த்தது
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தன்னை எப்போதும் அழைத்து அறிவுறுத்தவில்லை என்றும், அமித் ஷாவை நேரில் சந்தித்தபோது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டதாகவும், அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். பாஜக தரப்பில் அழைக்கப்பட்டே சென்றதாகவும், ஒருமுறை அழைத்தார்கள், இரண்டாவது முறை நானே சந்தித்தேன், மூன்று முறை இதுவரை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல இயலாது என்றும் அவர் தெரிவித்தார். எல்லோரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே ஆசை, அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி