மதுரை கூடல் புதூரில், கடந்த 13 ஆம் தேதி ஜெயலெட்சுமி(52) என்பவர் தனது பேரன், பேத்தியுடன் நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் பணப்பையை பறிக்க முயன்றனர். இதில் மூவரும் கீழே விழுந்தனர். திருடர்கள் பணப்பையுடன் தப்பிச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்டதும், பணப்பையை வீசிவிட்டு திருடர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகிறது.