மதுரை நாகமலை புதுக்கோட்டையில், கந்தசாமி (73) தனது மனைவி யோகாம்பிகை (68) மற்றும் மகன் சசிகுமார் (32) உடன் வசித்து வந்தார். இன்று காலை மகள் மணிமேகலை தாயார் வீட்டிற்கு வந்தபோது, கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, யோகாம்பிகை தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஒரே நேரத்தில் கணவர் தற்கொலை, மனைவி கொலை என மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.