மதுரை மத்திய தொகுதியுடன் பி.டி.ஆர். குடும்பத்திற்கு நீண்டகால தொடர்பு உள்ளது. அவரது தாத்தா பி.டி. ராஜன் நீதிக்கட்சி காலத்தில் முதல்வராக இருந்தார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை மூன்றாவது முறையாக போட்டியிடும் அவருக்கு, அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி. கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாதக சார்பில் அப்துல் ஹக்கிம், தவெக சார்பில் முஸ்தபா ஆகியோர் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.