மதுரை பழங்காநத்தம் வெங்கடாசலபுரம் பகுதியில் சர்வீஸுக்காக நிறுத்தப்பட்டிருந்த காரில் அழுகிய நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவர் தனது காரை கடந்த வாரம் சர்வீஸுக்காக நிறுத்தியுள்ளார். உதிரி பாகங்கள் கிடைக்காததால் 4 நாட்களுக்குப் பிறகு அவற்றை வாங்கி வந்த நிலையில், நேற்று (மே 30) இரவு காரின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. காரைத் திறந்து பார்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.