மதுரை: மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

858பார்த்தது
மதுரை: மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்த 53 வயதான கட்டிடத் தொழிலாளி குருவன், சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ​​மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திலகா்திடல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி