இளம்பெண் தற்கொலை;ஆர் டி ஓ விசாரணை

0பார்த்தது
இளம்பெண் தற்கொலை;ஆர் டி ஓ விசாரணை
மதுரை தல்லாகுளம் அருகே ஆத்திக்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (26) நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு மகள் உள்ள நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி