கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்த மதுரை ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (24), உடல் கட்டி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை அளித்தும் குணமடையாத நிலையில், வலி தாங்க முடியாமல் விவசாய கல்லூரி வளாகத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.