மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பிரகாஷ் (76) மற்றும் அவரது உறவினர்களான சுலோச்சனா (72), வசந்தா (90), வெங்கடேஷ் (60), ஆஷா (58) ஆகியோர் நேற்று (மே 17) சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி-மதுரை நான்கு வழிச் சாலையில் கொட்டாம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மையத் தடுப்பில் மோதியதில், காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.