அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டி, மேலூர் நகர் கழக அதிமுக சார்பில் மேலூர் சந்தைப்பேட்டையில் இருந்து பழமுதிர்ச்சோலை வரை பாதயாத்திரை இன்று (பிப். 25) தொடங்கப்பட்டது. மேலூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் ஆகியோர் இந்த பாதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.