அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பரபரப்பு குற்றச்சாட்டு

0பார்த்தது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெளியூர் வர்ணனையாளர்கள் காளை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவக் காப்பீடு, அறுவை சிகிச்சை வசதி, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் நிறுவனத் தலைவர் முடக்கத்தான் மணி, இந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி, வீரர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.