மதுரை மாவட்டம், மேலூரில் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு சிறுவர் சிறுமிகளுக்கான இணைய தள குற்றம் தொடர்பான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று (அக். 2) நடைபெற்றது.
முதலில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை மேலூர் தாசில்தார் செந்தாமரை தொடங்கி வைத்தார். போட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி சந்தப்பேட்டை வழியாக அல் அமீன் பள்ளி சென்று அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை வந்தைடையும்படியும், ஜாஸ் பள்ளி வரை சென்று திரும்பும்படியும் மற்றொரு பிரிவும் நடைபெற்றது. பொதுமக்கள் குழந்தைகளை கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகபடுத்தினர்.
தொடர்ந்து 12 வயது உட்பட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயத்தை மதுரை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் கருப்பையா, மேலூர் காவல்துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் போட்டியை துவங்கி வைத்தனர்.
பெண்களுக்கான சாரீ வாக்கத்தான் போட்டியினை மில்டன் பள்ளி தாளாளர் வின்சென்ட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏ. டி. எஸ். பி. கருப்பையா, டி. எஸ். பி. வேல்முருகன், மேலூர் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, மேலூர் அரசு தலைமை மருத்துவர் ஜெயந்தி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும், பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர். மேலூர் நகரில் முதன்முறையாக சிறுவர் சிறுமிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.