மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்.

3பார்த்தது
மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலூர் அருகே வெள்ளலூரில் இன்று (பிப். 7) காலை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப் போட்டியின் பந்தய தூரம் வெள்ளலூர் மந்தையில் தொடங்கி மேலூர் ரோடு வரை நடைபெற்றது. மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் எம். எல். ஏ கா. தமிழரசன் ஆகியோர் கொடியசைத்து இந்த மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.