மதுரை மாவட்டத்தில் சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ, கார் மற்றும் அரசு பேருந்து சேவைகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. மேலமடை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் சிஎன்ஜி நிரப்ப வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சில ஓட்டுநர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து எரிவாயு பெற்றனர்.
போர் சூழல் போன்ற காரணங்களால் விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுப்
போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் குறித்து வாகன ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.