மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேற்று (மே 21) மேலூர் அருகே பள்ளப்பட்டி கிராமத்தில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை ஆய்வு செய்தார். இந்த தடுப்பணை மூலம் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். மேலும், சுமார் 1 கி.மீ சுற்றளவில் உள்ள 55 கிணறுகள் நீர்செறிவூட்டப்பட்டு, 230.74 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.