மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழா இன்று (அக்.,1) விமர்சையாக துவங்கியது. இதில் பெண் பக்தர்கள் வெள்ளலூர் சின்ன ஏழை காத்தம்மன் கோவிலில் இருந்து 7 கிமீ தூரத்தில் உள்ள அம்பலகாரன்பட்டியில் உள்ள பெரிய ஏழை காத்த அம்மன் கோவிலுக்கு சாமி சிலைகள், பதுமையுடன் ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோலை சுற்றி கொண்டு 7 கிமீ தூரம் ஊர்வலம் சென்று தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.இந்நிகழ்வில் ஏராளமான சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.