அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம்.

0பார்த்தது
அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்களில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வரவேற்பது தொடர்பாக மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக அரங்கில் நேற்று (ஜன. 10) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை வடக்கு மாவட்ட, மேலூர் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு வருவோரை சிறப்பாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி