மதுரை மாவட்டம் மேலூர் கச்சிராயன்பட்டி பரமநாதபுரத்தை சேர்ந்த மணி( 64) என்பவர் திருச்சி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த மணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்