மேலூா் அருகே கார் மோதி மூதாட்டி பலி
By Gowthama Rajakumaran 1பார்த்ததுமேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டியைச் சோ்ந்த புஷ்பம் (60) தனது உறவினா் மகளான தேசாஸ்ரீயுடன் (5) புரண்டிப்பட்டி விலக்கில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த காா் மோதி புஷ்பம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குழந்தை தேசாஸ்ரீ மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநரான முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.