மேலூர்: சாலை விபத்தில் விவசாயி பலி

1083பார்த்தது
மேலூர்: சாலை விபத்தில் விவசாயி பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே து. செட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (30) என்ற விவசாயி, நேற்று முன்தினம் (பிப். 13) மாலை மேலூரிலிருந்து செட்டியார்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருப்புத்துார் பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்றபோது, அவரது வாகனம் நிலைத்தடுமாறி சாலையோர தடுப்பு கம்பியில் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி