சாலை விபத்தில் மகன் கண் முன் தந்தை பலி

2பார்த்தது
சாலை விபத்தில் மகன் கண் முன் தந்தை பலி
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கண்ணன் (54) என்பவர் தனது மகன் கோபி (36) ஓட்டி வந்த காரில் பாண்டிச்சேரி சென்றுவிட்டு திரும்பியபோது, மதுரை-திருச்சி சாலையில் மேலூர் அருகே தெற்குப்பட்டியில் சிமெண்ட் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் கண்ணன் உயிரிழந்தார். காரில் இருந்த மற்றவர்கள் காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த மகன் கோபி காயமின்றி தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி