மதுரை மேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. நீதிமன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மேற்கூரைகள் இடிந்து விழுவதாக மேலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, மேலூர் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.