மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலமுருகன்-கிருஷ்ணவேணி தம்பதியினர், தங்கள் நிலத்தை பாஜக ரவி ஆக்கிரமித்து இடையூறு செய்வதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். காவல்துறையினர் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக இருந்தபோதிலும், தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.